விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சில நாட்களுக்கு முன் தான் புலி என்று தலைப்பு வைத்தனர்.
ஏற்கனவே விஜய் படத்திற்கு பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கும். அந்த வகையில் இந்த முறை பிரச்சனை டைட்டிலேயே ஆரம்பித்தாலும் ஆச்சரியம் இல்லை.
ஏனெனில் புலி என்ற இந்த ஒரு சொல்லே போதும், இந்நிலையில் படக்குழுவினர் பலரும் இதுப்பற்றி விஜய்யிடம் தெரிவிக்க அவரும் யோசிக்க ஆரம்பித்து விட்டாராம்.
மேலும், இப்படம் குழந்தைகளை கவரும் வகையில் தான் எடுக்கப்பட்டு வருகிறதாம். அதனால் அனைவரையும் கவரும் வகையில் வேறு ஏதாவது டைட்டில் வைக்கலாம் என படக்குழு முடிவு எடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.