புலிப் பயங்கரவாத ஆதரவாளர்களினால், எனக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்று, மலேசியாவுக்கு புறப்படுவதற்கு முன்னரே நான் அறிந்திருந்தேன்’ என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ‘புலிகளின் எதிர்ப்புக்கு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
மலேஷியாவிலுள்ள இலங்கைப் பிரஜைகள் சிலரைச் சந்தித்ததன் பின்னர், அங்குள்ள ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபலமான அமைப்பாளர்கள், அப்பதவிகளிலிருந்து விலக்கப்பட்டமை காரணமாக, சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களிடம், கட்சி தொடர்பில் வெறுப்பு ஏற்பட்டுள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தையே நான் பொறுப்பேற்றுக் கொண்டதாகவே, இந்நேரத்தில் தெரிவிக்கின்றனர். அவர்கள்தான் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்ததாகத் தெரிவிக்கின்றனர். மலேஷியாவுக்கு நான் வருகைதருவதற்கு முன்னர், இவ்வாறான எதிர்ப்புகள் கிளம்பும் என்று அறிந்திருந்தேன். புலிகள் எதிர்க்கின்றார் என்பதற்காக, நான் போகும் பயணத்தை நிறுத்த மாட்டேன்’ என்றும் அவர் கூறினார்.