யாழ்ப்பாணம் மற்றும் வடக்கில் எந்தவொரு அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என, தான் மகாநாயக்க தேரரிடம் தெரியப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நேற்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது அந்தப் பகுதியில் அமைதி நிலவுவதாகவும் இதுகுறித்து காலை யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
புலிக்கொடி எங்கும் இல்லை எனவும், தமிழர் கூட்டமைப்பு புலிக்கொடியை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை எனவும், நாட்டுக்குள் தமது பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத் தருமாறே கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.