“புலிகளை வென்றதற்காக வருந்துகிறேன்” – கோட்டாபய

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை வென்றது குறித்து தான் வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார்.

gotabaya_rajapaksa_koththa

அந்தப் போரில் வென்றதால்தான் தன் மீது இப்போது போர்க்குற்றங்கள் சுமத்தப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த வாரம் வெளியிட்ட அறிக்கையை நிராகரித்தார்.

போரில் இரு தரப்புகளும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்திருக்கலாம் என்று அந்த அறிக்கை கூறியது.

இந்த அறிக்கை ஜெனிவாவில் ஒரு குளிர்பதன வசதி செய்யப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றும், விடுதலைப் புலிகள் ஆதரவு பிரச்சார வெளியீடுகளின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்று கோட்டாபய கூறினார்.

ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் இந்த அறிக்கை போரின் போது ராணுவக் காவலில் நடந்த கொலைகள், சித்ரவதை, பாலியல் வன்முறை மற்றும் தாறுமாறான ஷெல் குண்டு வீச்சு சம்பவங்கள் ஆகியவற்றை பட்டியலிட்டிருந்தது.

Related Posts