விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாகுவதற்கோ அல்லது விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளை நடத்துவதற்கோ இராணுவத்தினர் ஒரு போதும் இடமாளிக்கமாட்டார்கள். பொதுமக்களிடம் பிரச்சினைகளைத் தோற்றிவித்து கிளர்ச்சிகளை உருவாக்க சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர்’ என்று யாழ். 51ஆவது படைப்பிரிவின் தளபதி சந்தன குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை 512ஆவது படைப்பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டங்கள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,
போருக்குப் பிந்திய காலத்தில் யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதனை சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் விமர்சித்து வருகின்றன. இதனால் இராணுவத்தினர் என்ன செய்கின்றார்கள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இராணுவத்தினர் பொதுமக்களுக்கு என்ன சேவையாற்றுகின்றார்கள் என்பதை அரச ஊழியர்களாகிய நீங்கள் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
வடக்கில் இராணுவம் தேவையில்லை என்று பல்வேறு பல்வேறு தரப்பினர் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகின்ற பணத்தினைப்பெற்றுக்கொண்டு தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
ஆத்துடன் தற்போது இங்குள்ள மதகுருமார்களும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் இராணுவத்தினர் வடக்கில் அதிகமாக உள்ளனர் இராணுவவம் வடக்கில் இருந்து வெளியேற்றப்படவேண்டும் என்றே தெரிவிக்கினர் தற்போது இங்கு கடமையாற்றும் இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தியில் பெரும் பங்காற்றி வருகின்றனா இங்குள்ள காலச்சாரத்திற்கு மாற்றப்பட்டவர்காதக கடமையாற்றி வருகின்றனர் என்று அவர் குறிப்பட்டார்.