சிறீலங்காவில் மனித உரிமைகள் நிலமைகள் முன்னேற்றமடைந்துள்ளதால், விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என அடைக்கலம் கோரியவர்களை பாதுகாக்கவேண்டிய தேவையில்லையென சுவிஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுவிஸ் குடிவரவுப் பணியகத்தை மேற்கோள்காட்டி, சுவிஸ் இன்போ இணையத்தளம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ‘சிறீலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்’.
குறிப்பாக, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் உரிமைகள் தொடர்பான விடயங்களில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே, தற்போது தஞ்சம் கோரும் ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சி அரசயில்வாதிகளின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் இன்னும் அதிகமான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும்.
அத்துடன், விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களைப் பாதுகாக்கவேண்டிய தேவை குறைந்துள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.