புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? :விரைவில் தெரியவரும்

கடந்த காலத்தில் தாம் செய்த குற்­றங்­களை மறைக்­கவே இன்று கட்­சியை விட்டு வெளி­யேறி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை வீழ்த்­துவோம் என அச்­சு­றுத்­து­கின்­றனர். எம்மை அச்­சு­றுத்தி தம்மை காப்­பாற்ற டீல் போடு­கின்­றனர். எனினும் இந்த அச்­சு­றுத்­தல்­களை கண்டு நாம் அஞ்­சப்­போ­வ­தில்லை. தனித்து போக விரும்­புவோர் கட்­சியை விட்டு வெளி­யேற அனு­மதி உண்டு. ஆனால் ஊழல் மோச­டிகள் மற்றும் குற்­றங்கள் தொடர்பில் எமது நட­வைக்­கைகள் தொடரும் என சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முக­கி­யஸ்­தரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார்.

இன்று நல்­ல­வர்கள் போல நடித்­துக்­கொண்டு எமது இரா­ணு­வத்­திற்­காக குரல்­கொ­டுக்கும் நபர்கள் அன்று யுத்­தத்­தின்­போது எமது இரா­ணு­வத்தை கொள்­ளவே புலி­க­ளுக்கு ஆயு­தமும் பணமும் கொடுத்­தார்கள் என்ற உண்மை வெகு­வி­ரைவில் வெளி­வரும். விரைவில் இவர்­களின்

முகத்­தி­ரைகள் கிழியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து தம்மை தண்­டிக்க நினைப்­ப­தாக மஹிந்த ஆத­ரவு அணி­யினர் பிர­சாரம் செய்து வரு­கின்­றனர். இதில் எந்த உண்­மையும் இல்லை என நாமும் பல தட­வைகள் தெரி­வித்­துள்ளோம். ஆனால் இவர்கள் தமது தனிப்­பட்ட சுய­நல செயற்­பா­டு­களை தக்­க­வைக்கும் நோக்­கத்தில் இவ்­வா­றான செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெ­றா­மலும் இல்லை.

இன்று எமது இரா­ணுவ வீரர்­க­ளுக்­காக அனு­தா­பக்­குரல் எழுப்பி வரு­கின்­றனர். இரா­ணுவ வீரர்­களை தண்­டிக்க எமது அர­சாங்கம் முயற்­சிப்­ப­தாக குற்றம் சுமத்­து­கின்­றனர். இன்று பாது­காப்பு படைகள் மீது அக்­கறை காட்டும் மஹிந்த அணி­யி­னரே அன்று சரத் பொன்­சேகா எனும் பல­மான ஒரு­வரை தண்­டித்து அவரை சிறையில் அடைத்­தார்கள்.

அண்­மைய காலத்தில் உலகம் போற்றும் மிகப்­பெ­ரிய தள­பதி என கூறப்­படும் சரத் பொன்­சே­காவை இவர்கள் என்ன செய்­தார்கள்.? அவ­ரது வர­லாற்றை இந்த கூட்­ட­ணியே அழித்­தது. நீதி­ய­ர­சரை இரு­பத்­து­நான்கு மணி­நே­ரத்தில் பதவி நீக்­கி­யது, பொது­மக்­க­ளுக்கு எதி­ராக இரா­ணுவ தாக்­குதல் நடத்­தி­யமை என மிக மோச­மான மனித உரிமை மீறல்கள் நடத்­தினர். அப்­போது நான் உட்­பட இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பலர் மஹிந்த அர­சாங்­கத்தில் இருந்தோம் என நினைக்கும் போது அனை­வரம் வெட்கித் தலை­கு­னிய வேண்டும்.

அதேபோல் இன்று நல்­ல­வர்கள் போல காட்­டிக்­கொண்டு எம்மை பிரி­வி­னை­வாத அர­சாங்கம் என விமர்­சிக்கும் நபர்கள் அன்று யுத்­தத்தின் போது என்ன செய்­தார்கள் என்ற உண்மை வெகு­வி­ரைவில் வெளி­வரும். இன்று இரா­ணு­வத்தின் மீது அனு­தாப கண்ணீர் வடிக்கும் இதே குழுவை சேர்ந்த முக்­கி­ய­மான நபர்­களே அன்று எமது இரா­ணு­வத்தை கொல்ல விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு ஆயுதம் கொடுத்­தனர். தேர்­தலில் மக்கள் வாக்­க­ளிக்க அனு­ம­திக்க கூடாது என அழுத்தம் கொடுத்து புலி­க­ளுக்கு பணம் கொடுத்­த­ரகள். இந்த உண்­மைகள் விரைவில் வெளி­வரும். யார் நல்­ல­வர்கள் என்­பது அப்­போது தெரி­ய­வரும்.

மேலும் இன்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாகும் என்ற கதை­களை கூறி கட்­சிக்குள் குழப்­பத்தை ஏற்­ப­டுத்த நினைக்­கின்­றனர். ஆனால் இன்று கட்சி இரண்­டாக வேண்டும் என கூறும் எவரும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்கள் அல்ல. இருக்கும் சிலரும் இன்று இன­வாதக் கருத்­து­களை பரப்பி தமது இருப்பை தக்­க­வைக்கும் உறுப்­பி­னர்­க­ளே­யாவர். . எனவே இவர்­களை நம்பி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் எவரும் இல்லை. எமது கட்சி எப்­போதும் தலை­மைத்­து­வத்­தினை ஏற்று அதற்கு கட்­டுப்­பட்டு செயற்­படும் கட்­சி­யா­கவே இருந்து வரு­கின்­றது. அவ்­வாறு இருக்­கையில் புதிய கூட்­டணி உரு­வாக்கும் எவ­ரையும் நம்பி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்­கா­ரர்கள் எவரும் கள­மி­றங்கப் போவ­தில்லை.

அதேபோல் இன்று தனிக்­கட்சி அமைத்து ஆட்­சியை கைப்­பற்­று­வ­தாக கூறும் எவரும் தைரியம் இல்­லாத நபர்கள். கோழி­யைப்­போல கொக்­க­ரித்­துக்­கொண்டு காலத்தை கடத்தும் நபர்­களே இவர்கள். தனித்து பய­ணிக்க விரும்­பு­ப­வர்கள் தமக்கு தைரியம் இருக்­கு­மானால் இந்த நேரம் தனிக்­கட்சி அமைத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அவ்­வாறு இல்­லாது முட்­டை­யிடும் கோழி­யைப்­போல கொக்­க­ரித்­து­கொண்டு இருப்­பது வெறும் வேஷம் என்றே கூற­வேண்டும்.

இது­வ­ரையில் தாம் தனிக்­கட்சி அமைத்து செயற்­ப­டப்­போ­வ­தாக மஹிந்த ராஜபக் ஷ கூற­வில்லை. எனினும் யோசித்த ராஜபக் ஷவின் கைதின் பின்­னரே அவர் அவ்­வா­றான முடிவில் உள்ளார். எவ்வாறு இருப்பினும் கட்சியை விட்டு வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வீழ்த்துவோம் என அச்சுறுத்தி தமது குற்றங்களை மறைக்க டீல் போடுகின்றார்கள். இந்த அச்சுறுத்தல்களை கண்டு நாம் அஞ்சப்போவதில்லை. தனித்து போக விரும்பும் எவரும் கட்சியை விட்டு வெளியேற அனுமதி உண்டு. ஆனால் ஊழல் மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் எமது நடவைக்கைகள் தொடரும் என்றார்.

Related Posts