புலிகளுக்கு நிதி சேகரித்தமை பயங்கரவாதச் செயற்பாடு! : ஐரோப்பிய நீதிமன்றம்!

விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், தமது நடவடிக்கையை தீவிரவாதச் செயற்பாடு என்று வகைப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மோதலின்போது ஆயுதப்படைகளின் செயற்பாடுகள் தீவிரவாதம் எனக் கருதமுடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நெதர்லாந்து நாட்டில் விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த நால்வர், டச்சு நீதிமன்றத்தினால் தமது நிதி முடக்கப்பட்டதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர்.

இதன்போது, தாம் மனிதாபிமான நடவடிக்கைக்காகவே நிதி சேகரித்ததாகவும், தீவிரவாத செயற்பாடுகளுக்கல்ல எனவும் வாதிட்டனர்.

அத்துடன் சிறீலங்காவில் நடந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் அரசு அல்லாத ஆயுதப்படையாகவே பங்கேற்றதாகவும், எந்த அனைத்துலக பிரகடனங்களையும் மீறவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும், மோதல்களின்போது ஆயுதப்படைகளின் செயற்பாடுகள் தீவிரவாதம் எனக் கருதப்படும் என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Posts