புலிகளின் போர்க்குற்றங்களை சமர்ப்பிக்க தயார் சுமந்திரன் பாராளுமன்றில் பேச்சு

புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை சமர்பிக்க தயார் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று(10) பாராளுமன்றில் தெரிவித்தார்

இராணுவம் மற்றும் புலிகள் இருதரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர் என சர்வதேச அறிக்கையில் மிகத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்த அவர்

இதைத்தெரிவிப்பதற்காக என்சார்ந்த சமூகம் என்னை கடுமையாக சாடும் ஆனால் எல்லாத்தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தன என்பதே உண்மை என்றார்

மேலும் கூறுகையில் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தான் போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்ள தயார் என மீண்டும் மீண்டும் கூறிவருகின்றார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

Related Posts