புலிகளின் ‘பிஸ்டல் அணி’ துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் ‘பிஸ்டல் அணியினர்’ பயன்படுத்திய இரு கைத்துப்பாக்கிகளுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செவனகல பொலிஸார் கடந்த மூன்று மாதங்களாக நடத்திய விசாரணைகளின் பிரகாரமே இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்திலிருந்து தப்பிவந்து பின்னர் சட்டபூர்வமாக அதிலிருந்து விலகியவர் (வயது 45 ) என்று பொலிஸார் தெரிவித்தனர்.

செவனகல பொலிஸாருக்கு இற்றைக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் பிரகாரம் அவர்கள் தீவிர விசா ரணைகளை முன்னெடுத்துவந்த நிலையிலேயே சந்தேகநபர் செவனகல, கொவுல்ஹான பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 13 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. புலிகள் அமைப்பின் பிஸ்டல் அணியினர் பயன்படுத்திய கைத்துப்பாக்கிகளையே இவர் வைத்திருந்தார் எனத் தெரியவந்துள்ளது.

இவற்றைப் பயன்படுத்தி கொலைகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது தொடர்பிலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராணுவச் சிப்பாய் நேற்று எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Related Posts