புலிகளின் கொடியுடன் மாவீரர் நாள் நிகழ்வை நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி கோப்பாயில் நடைபெறவிருந்த மாவீரர் நிகழ்வில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், இலச்சினைகள் என்பனவற்றை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என கோப்பாய் பொலிஸார் யாழ் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில் குறித்த மனு நேற்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ் நீதவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் மேற்கண்டவாறு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாயில் 512ஆவது படைத்தலைமையகம் உள்ள காணிக்கு (மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related Posts