புலம்பெயர் தமிழர் ஒருவரால் சுன்னாக மக்கள் அதிருப்தியில்!

சுவிற்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் ஒருவர் தனது காணியை சுன்னாகம் காவல்துறையினருக்கு விற்பனை செய்வதற்கு முன்வந்துள்ளார்.

உடுவில், சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த புலம் பெயர்ந்த தமிழரே காவல்துறையினருக்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளார்.

குடியிருப்புக்களுக்கு மத்தியில் அமைந்துள்ள குறித்த காணியை, குடியிருப்பாளர்கள் அந்தக் காணியைக் கோரியுள்ளபோதிலும், அதற்கு காணி உரிமையாளர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்குச் சொந்தமான 14 பரப்புக் காணியையும் காவல் நிலையம் அமைக்கவே வழங்கப்போவதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

குறித்த புலம்பெயர் தமிழரின் செயற்பாட்டினால் அப்பகுதி குடியிருப்பாளர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

Related Posts