புலமை பரிசில் பரீட்சையில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம்

grade5எதிர்காலத்தில் பொருளியலாளனாகி இந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே எனது இலக்கு என புலமை பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்ற மாணவனான பரமானந்தம் தனுராஜ் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2013ம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் யா/ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலை மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.

யா/ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையை சேர்ந்த மாணவன் ஒருவன் யாழ் மாவட்டத்தில் முதலாவதாக வந்து இதுவே முதல் தடவையாகும்.

இம்முறை நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சையில் குறித்த பாடசாலையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

அதேவேளை, யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்ற குறித்த மாணவனுக்கு பாடசாலை சமூகத்தினரால் துவிச்சக்கர வண்டி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.

அந்த மாணவன் முதலிடம் பெற்றது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

´ஏழாலை மேற்கு ஏழாலையை சேர்ந்தனான் எனது குடும்பம் நடுத்தர குடும்பமாகும் எனது அப்பா ஏழாலை மேற்கில் கடை வைத்துள்ளார்.

நான் பாடசாலையில் கற்பிக்கும் பாடங்களையும் தனியார் கல்வி நிலையங்களில் கற்பிக்கும் பாடங்களையும் இரவினில் வீட்டில் இருந்து படித்ததினால் தான் என்னால் இந்த புள்ளிகளை எடுக்க முடிந்தது.

இரவினில் நான் அத்தை வீட்டில் சென்றே அன்றைய தினம் படித்த படங்களை படிப்பேன் எனக்கு அக்காவும் பாடங்களை சொல்லி தந்து படிப்பதற்கு உதவினார்கள்.

நான் எதிர்காலத்தில் பொறியியலாளனாகி இந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே எனது இலக்காகும் என மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் முகுந்தன் மிதுலன் 193 புள்ளிகளை எடுத்து யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி உதயகுமார் கம்சாயினி 191 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளனர்.

Related Posts