வசதி குறைந்த – கிராமப்புற மாணவர்கள், தமது உயர் கல்வியை பிரபல பாடசாலைகளில் தொடர்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை அமைகிறது.
எனவே அந்தப் பரீட்சையை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளதாவது:
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை 2016 ஆம் ஆண்டுடன் நடத்துவதில்லை என்று அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தப் பரீட்சை தொடர்ந்து நடைபெறுவது கட்டாய தேவையாகும்.
ஏனைய பிற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரபல பாடசாலைகளுக்குச் செல்வதற்கு இந்தப் பரீட்சையே உதவுகின்றது. எனவே தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை தொடர்ந்து நடத்துதல் வேண்டும் என்றார்.