தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்றையதினம் வெட்டுப்புள்ளியில் குறைப்பு இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே 157 ஆக இருந்த வெட்டுப்புள்ளி தற்போது யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு 150 புள்ளிகளாகவும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு 149 புள்ளிகளாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடிய வெட்டுப்புள்ளி தமிழ் மொழி மூலத்தில் 152 ஆகவும் சிங்கள மொழி மூலத்தில் 157 ஆகவும் காணப்படுகின்றது. தமிழ் மொழி மூலத்தில் கொழும்பு, ஹம்பகா, களுத்துறை , கண்டி, மாத்தளை , மாத்தறை, காலி , குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் வெட்டுப்புள்ளி 152 ஆகவும்,
வடக்கு மாகாணத்துடன் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை, மொனராகலை மாவட்டங்களில் 149 புள்ளிகளாகவும், புத்தளம் , அநுராதபுரம், இரத்தினபுரி மாவட்டங்களில் 148 புள்ளிகளாகவும் வெட்டுப்புள்ளி குறைக்கப்பட்டுள்ளது.