எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், 50 ஆயிரத்து 701 விண்ணப்பதாரிகள் தோற்றவுள்ளனர்.
இதில் 421 பேர் விசேட திறனுடைய விண்ணப்பதாரிகள் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டாயிரத்து 959 பரீட்சை மத்திய நிலையங்களில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பரீட்சையின் பொருட்டு, மாணவர்கள் நேரத்துடனே பரீட்சை மண்டபங்களுக்கு சமூகம் அளிக்க வேண்டும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது, நாடளாவிய ரீதியில் 28 ஆயிரம் பரீட்சை மேற்பார்வையாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பரீட்சையின் முதலாம் பாகம் 40 நிமிடங்களும், இரண்டாம் பாகம் 1 மணித்தியாலமும், 15 நிமிடங்களும் என்பது குறிப்பிடத்தக்கது.