புலமைப்பரிசில் பெறுபேறுகள் நாளை மறுதினம் வெளியாகும்

wmnj pushpakumaraதரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 02ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.

பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிட்டு வைக்கப்படும் அதேவேளை, மாணவர்களின் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

ஆகஸ்ட் 25ஆம் திகதி நடைபெற்ற தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 29 ஆயிரத்து 725 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

இப்பரீட்சை நாடு முழுவதும் 2 ஆயிரத்து 386 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts