புலமைப்பரிசில் பரீட்சை; யாழ். மாவட்டத்தில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் அபிராம் முதலிடம்

நடத்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சைப் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதையடுத்து முடிவுகளின் படி யாழ் மாவட்டத்தில் இம்மாணவன் 193 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ் இந்து ஆரம்ப பாடசாலையில் இருந்து இம்முறை பரீட்சைக்கு 309 மாணவர்கள் தோற்றியுள்ளனர். இதில் 143பேர் சித்தியடைந்துள்ளனர் என பாடசாலை சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த கலைச்செல்வன் கீர்த்திகன் 191 புள்ளிகளையும், ஸ்ரீகந்தராசா ஆரணி 190 புள்ளிகளையும் பெற்றுள்ளனர் என்று பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Posts