புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது.

பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும்.

பகுதி ஒன்று வினாப்பத்திரம் கடினமானது என்பதால் பாட விடயதானங்கள் அடங்கிய பகுதி இரண்டின் வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பெற்றோர்களால் கோரப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.

Related Posts