புலமைப்பரிசில் பரீட்சை : இரண்டு பதில்களுக்கும் புள்ளிகள்

சிவனொளி பாத மலை எந்த மாகாணத்துக்குரியது? என நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பெரும்பாலான மாணவர்கள், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களென விடையளித்துள்ளனர்.

நில அளவையியல் திணைக்களத்தின் படி, முறைப்படி சிவனொளி பாத மலையானது சப்ரகமுவ மாகாணத்துக்குரியது என்ற போதிலும் வரைபடங்களின்படி இது மத்திய மாகாணத்துக்குரியதாகக் கருதப்படுகின்றது.

எனவே, இவ்விடயத்தில் சிக்கல் நிலை எழுந்ததாகவும் எனினும், ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மாணவர்களின் நலன்கருதி இவ்விரண்டு பதில்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts