எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, திட்டமிட்டவாறு அன்றைய தினமே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்தது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என நாள் குறிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஓகஸ்ட் மாதம் நடைபெற ஏற்பாடாகியிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், புலமைப்பரிசில் பரீட்சையை குறித்த திகதியில் நடத்துவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதால், அன்றைய தினமே அப்பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டது.