புற்றுநோய் தொடர்பாகச் சிகிச்சையளித்து பொது மக்களிடம் வாங்கி கட்டிய வைத்தியர் சாவகச்சேரியில் சம்பவம்

புற்றுநோய் கிளினிக்கிற்கு சென்ற  நோயாளிகளுக்கு சம்பந்தமில்லாமல் மருந்துகளை வழங்கி சிகிச்சையளிக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையி்ன் பொறுப்பு வைத்தியர் வைத்திய கலாநிதி ரி.குகதாஸின் செயற்பாடுகளால் நோயாளர்கள் பெரிதும் விசனமடைந்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையி்ன் புற்றுநோய் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி என் ஜெயக்குமாரன் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து  வெளி நோயாளர் பகுதிகளுக்கான வருகைகளை வைத்தியர் இடைநிறுத்தினார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புற்றுநோய் கிளினிக்கிற்கு சென்ற நோயாளிகள் வைத்தியர் ஜெயக்குமாரன் இல்லாமையினால் ஏமாற்றமடைந்து  திரும்பி செல்ல முற்பட்டனர் இதன் போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் ரி.குகதாஸ் நோயாளர்களுக்கு மருந்து வில்லைகளை கொடுத்துள்ளார். இதனால் விசனமடைந்த மக்கள் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை அதற்கான வைத்தியர்கள் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்று கூறினார்கள்.

Related Posts