புற்றுநோய் கதிரியக்க இயந்திரம் பழுது! கவனமெடுக்காத வடக்கு மாகாண சபை மீது மக்கள் விசனம்!!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் கதிரியக்க இயந்திரம் பழுதடைந்து காணப்படுவதால் வடக்கு மாகாணத்தில் உள்ள புற்றுநோயாளர்கள் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்

புதிதாக புற்றுநோய் உள்ளது என இனங்காணப்பட்ட நோயாளர்களுக்கு உடலின் எந்தப் பாகத்தில் கதிரியக்க சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதைக் கண்டறியும் Moulding Machine பழுதடைந்து உள்ளது.

இந்தக் கதிரியக்க இயந்திரம் பழுதுபார்க்கும் நிறுவனத்துடனான ஒப்பந்தகாலம் முடிவடைந்துள்ளமையாலேயே கதிரியக்க இயந்திரம் திருத்தப்படாத நிலைமை காணப்படுகின்றது. அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்குக் கிட்டத்தட்ட ஒருகோடி ரூபா தேவை என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலே மாகாண அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள புற்றுநோய் வைத்தியசாலையாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மட்டுமே காணப்படுகின்றது

வடக்கு மாகாண அரசு எமது வைத்தியசாலையை ஒரு பொருட்டாகக் கருதி அதன் தேவைகளைப் பூர்த்திசெய்யத் தவறிவருகின்றது புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை முழுமையாக இயக்குவதற்குரிய ஆளணி மற்றும் நிதி வளங்கள் மாகாண அரசிடம் இல்லை என்பயைும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் எனவே. வடக்கு மாகாண அரசு வைத்தியசாலையை சரிவர தம்மால் இயக்கமுடியாது என்று உணர்ந்தால் மத்திய அரசிடம் கையளிப்பதே ஒரே வழி. நோயாளர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கோள்ள முடியாது. என நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Posts