புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழில் திறந்து வைப்பு!

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ் போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில்நேற்று (புதன்கிழமை)காலைதிறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை புற்றுநோயியல் தடுப்பு நிகழ்ச்சி திட்டத்தின் தலைவர் திருமதி ஜானகி விதான பத்திரன கொழும்பிலிருந்து வருகை தந்து திறந்துவைத்தார் .

இது குறித்து கருத்து தெரிவித்த யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையில் பதில் பணிப்பாளர் பவானந்தராஜா இவ்வாறு தெரிவித்தார்,

”உலகளாவிய ரீதியிலும் சரி இலங்கையிலும் சரி இறப்பு களுக்கான காரணமாக இரண்டாவதாக இடம் வகிக்கும் நோயாக புற்று நோய் காணப்படுகின்றது. எனவே அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதனை தடுப்பதன் மூலம் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும் .

வரலாற்றில் முதன்முதலாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் சிகிச்சை நிலையம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் முதல் முதலாக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய நிலையம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டமையானது வடக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாத மான செயற்பாடாகும்
குறித்த நிலையமானது நிலையமானது புற்றுநோய் அறிகுறி எதுவும் ஏற்பட முன்னர் ஒரு சாதாரண நோயாளிக்கு ஒரு சாதாரண மனிதருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா எதிர்காலத்தில் புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏதும் உள்ளதா என்பதை பற்றி கண்டறிவதற்கான அல்லது அவ்வாறான நோயாளிகளுக்கு இது வரைக்கும் ஏதாவது புற்றுநோய் ஏற்பட்டு ள்ளதா என்பதை பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒரு நிலையமாகும்.

இந்நிலையம் புற்று நோயாளர்களுக்கான நிலையம் அன்றி புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு கூட்டியே அதனை ஏற்படாமல் தடுப்பதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிவதற்கான ஒரு நிலையமாக தொழிற்படும் நிலையமானது ஒரு வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இயங்கும் பொதுமக்கள் தங்களுடைய புற்றுநோய் சம்பந்தமான சந்தேகங்களை குறித்த சிகிச்சைநிலையத்திற்கு வருகை தந்து தெரிந்துகொள்ளலாம்
கொழும்புக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்திலே குறித்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி எவ்விதத் தயக்கமுமின்றி தமக்குரிய பரிசோதனைகளை குறித்தசிகிச்சை நிலையத்திற்கு வருகை தந்து மேற்கொள்ள முடியும்” எனவும் தெரிவித்தார்.

Related Posts