புற்றுநோயாளர்களுக்கு மருந்துகளை முற்றிலும் இலவசமாக வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை

புற்றுநோயாளர்களுக்கு இலவசமாக மருந்து வழங்குவதற்காக வைத்தியசாலைகளால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து மருந்து விலைச் சிட்டைகளுக்கும் பணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சுகாதார அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

புற்றுநோய்க்கான மருந்துகளின் விலை மிகவும் அதிகமாகும். இந்த மருந்துப் பொருட்களை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளையும் இலவசமாக வழங்கி சிகிச்சை வழங்கும் செயற்பாடு இலவச சுகாதார சேவைக்குள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இருதய நோயாளர்களுக்கான ஸ்ரென்சை இலவசமாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த வருடம் ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவை செலவிட அமைச்சுத் திட்டமிட்டுள்ளது. கண் வில்லைகளை இலவசமாக வழங்குதல், இரத்த பரிசோதனைகளை அரசாங்க வைத்தியசாலைகள் மூலம் இலவசமாக மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Related Posts