புற்றுநோயால் நடிகர் திடீர் மரணம்!

மலையாள படவுலகின் பழம்பெரும் நடிகர் ராகவன். இவரது மகன் ஜிஷ்னு (வயது 35).தந்தை நடிகர் என்பதால் குழந்தை நட்சத்திரமாக ஜிஷ்னு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு என்ஜினீயரிங் படித்து வேலையில் சேர்ந்த ஜிஷ்னு மீண்டும் ஆர்வம் காரணமாக திரையுலகில் புகுந்தார்.

jishnu

இளம் நடிகராக வலம் வந்த ஜிஷ்னு நித்ரா, உஸ்தாத் ஓட்டல், பேங்கிங் ஹவர்ஸ் 10 டூ 4, அன்னும் இன்னும் என்னும், நம்மல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார். நம்மல் படத்தில் நடித்ததின் மூலம் கேரள அரசின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதையும் பெற்றார்.

கடந்த சில ஆண்டுகளாக ஜிஷ்னு உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை கண்டு பிடித்தனர். இதற்காக தீவிர சிகிச்சை பெற்ற ஜிஷ்னு கடந்த ஆண்டு நோயில் இருந்து மீண்டார். அதன் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்து அவரை பொது நிகழ்ச்சிகளிலும் சினிமா விழாக்களிலும் காணவில்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் இதுபற்றி பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார். அதில், கொச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தனக்கு நோய் தொற்றி கொண்டதாகவும் கூறி இருந்தார்.

அவரது பேஸ்புக் பதிவை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து கருத்து வெளியிட்டனர்.

நேற்று காலை 8 மணிக்கு நோயின் தீவிரத்தால் ஜிஷ்னு திடீரென மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஜிஷ்னுவின் மனைவி தன்யா ராஜன் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

Related Posts