புறக்கோட்டையில் பயணப் பொதியில் தமிழ் பெண்ணின் சடலம் – அடையாளம் காண பொது மக்களிடம் உதவி கோரல்

கொழும்பு – புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் ஒரு தமிழ் பெண் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil-women-bag-1 (2)

tamil-women-bag-1

நேற்றையதினம் குறித்த சடலம் பயணப் பொதி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

பேருந்து நிலையத்தில் அனுராதபுரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டது.
எனினும் சடலம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கலத்தில் ஓம் என்று பொறிக்கப்பட்ட பென்ரன் ஒன்றுடனான தங்க சங்கிலி ஒன்று இருந்துள்ளது.

அத்துடன் காலில் கொலுசு மாட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலத்தை அடையாளம் காண்பதற்கு காவற்துறையினர் பொது மக்களின் உதவயை கோரியுள்ளனர்.

அவர் குறித்த தகவல்கள் தெரிந்தால், 011 2 3 23 677 – 011 2 66 23 11 மற்றும் 011 2 26 851 51 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Related Posts