பும்ரா வீசிய ‘நோ-பால்’: வித்தியாசமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் பஹார் ஜமான் 3 ரன்னில் இருந்த போது கேட்ச் ஆனார். ஆனால் பும்ரா, கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பாலாக வீசியது தெரிய வந்ததால் மறுவாழ்வு பெற்ற பஹார் ஜமான் அதன் பிறகு சதம் (114 ரன்) அடித்து தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

பும்ரா வீசிய நோ-பால் படத்தை பாகிஸ்தானில் பைசலாபாத் போக்குவரத்து போலீசார், வித்தியாசமாக போக்குவரத்து விதிமுறை தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.

அதாவது இரண்டு கார்கள் ஒரு பக்கத்தில் சாலையில், சிக்னல் எல்லைக்கோட்டுக்கு பின்னால் நிற்கிறது. இன்னொரு பகுதியில் பும்ரா நோ-பாலாக வீசும் காட்சி இடம் பெற்று இருக்கிறது.

அதற்கு கீழ் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் ‘சாலை விதிக்குரிய எல்லையை கடக்காதீர். மீறினால் அதிக விலையை கொடுக்க வேண்டியது வரும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் அங்கு பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

Related Posts