புனித ரமழான் நோன்பு இன்று ஆரம்பம்

ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று(06) மாலை தென்பட்டதனால் இன்று(07) ரமழான் புனித நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நேற்று மாலை கூடிய தலைப்பிறையை தீர்மானிக்கும் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழு உட்பட கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைப்பிறை தென்பட்டதற்கான பல தகவல்கள் ஊர்ஜிதம் செய்யப்பட்டதால் இவ்வருட ரமழான் மாதத்தின் நோன்பு இன்று ஆரம்பமாவதாக பிறைக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்தது.

Related Posts