புனர்வாழ்வு வழங்கப்பட்ட 20 பட்டதாரிகளுக்கு அரச வேலை வழங்க அமைச்சரவை ஒப்புதல்!!

புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 பட்டதாரி இளைஞர்களை வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ப்பதற்கும், அவர்களுக்கு வேலை வழங்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த இளைஞர்கள் 20 பேருக்கும் புனர்வாழ்வு திணைகளத்தால் புனர்வாழ்வுக்கு உட்பட்டுள்ளதாகவும், புதிய திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு கோரியுள்ளதாகவும் அமைச்சரவைக்கு பத்திரம் முன்வைக்கப்பட்டது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு உயர் கல்விக்கு உட்பட்டிருந்தாலும், 20 பட்டதாரிகளும் “சிவில் சமூகங்களால் தங்கள் தகுதிநிலை ஏற்றுக்கொள்ளாததால் வேலைவாய்ப்பைப் பெற முடியவில்லை” என்று அமைச்சரவை பத்திரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் உள்ள மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சால் இந்த அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டது.

Related Posts