Ad Widget

புனர்வாழ்வு பெற்ற மற்றொரு முன்னாள் போராளி புற்றுநோயால் மரணம்!

இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான விடுதலைப் புலிகள் அமைப்பின் மற்றொரு முன்னாள் போராளி, புற்றுநோயினால் மரணமாகியுள்ளார். முன்னாள் போராளிகள் ஒரே மாதிரியான நோயினால் பீடிக்கப்பட்டு மரணமடைந்து வருகின்றார்கள்.

ex-ltte-dead-women

இராணுவத்தால் புனர்வாழ்வு முகாமில் வைத்துப் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளியான பூநகரி நல்லூர் மகா வித்தியாலய தமிழ் பாட ஆசிரியை செல்வி தம்பிராஜா சந்திரலதா (வயது-37) புற்றுநோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம்தி தெல்லிப்பளை வைத்தியசாலையில் சாவடைந்தார்.

இவர் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னரே, நோய்த் தாக்கத்திற்குள்ளானதாகக் கூறப்படுகின்றது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக புற்றுநோய்க்கு பலியாகி வருவது பொதுமக்கள் மத்தியிலும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts