புனர்வாழ்வு இன்றி மாணவரை விடுவிக்குக – மாவை

கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் எதுவுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தந்தை செல்வா நினைவுத்தூபியில் நேற்று இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு

கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டு பல்கலைக் கழகத்தில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

எந்தச் சட்டத்தின் கீழ் எந்த அடிப்படையில் மாணவர்களைக் கைதுசெய்துள்ளனர்? முரணான வகையில் கைதுகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர அவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மேலும் கூறப்படுகிறது. கைதுகள் மூலம் போராட்டங்களை அடக்கிவிட இந்த அரசு முற்படுகிறது.

Related Posts