புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்படுகின்ற கடன் திட்டத்திற்கு இதுவரை யாழ் மாவட்டத்தில் 895 பேர் விண்ணப்பித்துள்ளதாக புனர்வாழ்வு பெற்றவர்களின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி தொடர்பான நிலையத்தின் இணைப்பு அதிகாரி மேஜர் ஜெகத்குமார தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கு அமைய புனர்வாழ்வு அமைச்சினால் புனர்வாழ்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக குறைந்த வட்டியில் 250,000 ரூபா ரூபா கடன் வழங்கப்படுகின்றது.
இந்த கடன்களை பெறுவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்கள் ஊடாக இதுவரை 895 பேர் விண்ணப்பித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் புனர்வாழ்வு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த கடன்களை பெற விரும்புவர்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.