புனர்வாழ்விற்கு தகமையுள்ள 23 அரசியற் கைதிகளின் பெயர்கள் வெளியீடு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தகைமை உடையவர்கள் என கருதப்படும் 23 கைதிகளின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட 96 சந்தேகநபர்களில் 23 பேருக்கு இவ்வாறு புனர்வாழ்வு பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்திருந்தது.

குறித்த 23 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சட்ட மா அதிபரை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கோரியுள்ளார்.

மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நிலுவையாக உள்ள வழக்குகளை தளர்த்துவது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் கீழுள்ள பிரிவினால் முன்னெடுக்கப்படும் ஆறு மாத கால புனர்வாழ்விற்கு சந்தேகநபர்கள் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதி ரான வழக்குகள் இலகுபடுத்தப்படும் என புனர்வாழ்வு அமைச்சின் பேச்சாளர் கூறியி ருந்தார்.

சிறிய குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்ட 23 பேரை புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படவுள்ள தாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

23-name-ist

Related Posts