யாழ்ப்பாணத்தில் துப்பாக்கி கலாசாரம் போய் தற்போது கத்தி கலாசாரம் மேலோங்கிவிட்டதாக யாழ். அமெரிக்க மிசன் தலைவர் அருட்பணி ஈரோக் புனிதராஜ் தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற சர்வமத சகவாழ்வுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
யாழ்.மாவட்டத்தில் அதிகம் மது விற்பனையாவதால் அனைவரும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே நாட்டின் அவலத்தை மாற்றியமைக்க வேண்டும் .இளைஞர்களுக்கு வன்முறை தூண்டப்பட்டு வருகின்றது.
இதனால் துப்பாக்கி கலாசாரம் போய் கத்தி கலாசாரம் வந்துவிட்டது.ஆகவே புத்தியை பாவிப்பதற்கு பதிலாக இளைஞர்கள் கத்தியை பாவிக்கின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.