புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி இன்று முதல் விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

இன்று காலை முதல் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை மற்றும் மஹவை வரை குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் விஷேட புகையிரத போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு கோட்டை மற்றும் மருதானையில் இருந்து காலி, மாத்தறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும் விஷேட புகையிரத சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று எதிர்வரும் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் மா்தறையில் இருந்து மருதானை வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரையிலும் மற்றும் பண்டாரவளை மற்றும் காலியில் இருந்து கொழும்பு வரையிலும் விஷேட புகையிரத போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related Posts