புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பங்கதெனியப் பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்து இரட்டைத் தலையுடன் கூடிய பாம்பு ஒன்று பிடிபட்டுள்ளது.
இந்த பாம்பு ”இரத்த மாம்பிலை”என்று இனங்காணப்பட்டுள்ளதுடன் ஆறு அடி நீளம் உடையது என தெரிவிக்கப்படுகின்றது.
பிடிக்கப்பட்ட இந்த இரட்டைத் தலை பாம்பை தெஹிவளை மிருக காட்சிசாலைக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.