இகினிம்பிட்டிய மற்றும் தம்போவ நீர்த்தேக்கங்களில் மேலதிக நீர், அணையை மேவி பாய்வதனால் புத்தளத்தில் பல பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதுவரையிலும் சுமார் 2000 பேர் இடம்பெயர்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதே வேளை எளுவங்குளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மன்னார்- புத்தளம் பழைய வீதி மூடப்பட்டுள்ளது.