புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண் கைது?

யாழ்ப்பாணம் வருவதற்க்காக திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணொருவர் அணிந்திருந்த சேலையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் பகல் வேளை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் வருவதற்க்கா திருகோணமலை பொது பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் குறித்த பெண்ணின் சேலையில் புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணை சுற்றிவளைத்து சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த இடத்திற்கு பொலிஸாரும் வந்த நிலையில், புத்த பெருமானின் உருவம் பொறிக்கப்பட்ட சேலை அணிந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலையை அணிந்த பெண்ணும், மற்றுமொருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Posts