புதுவருட விளையாட்டுப் போட்டிகள் துரையப்பா விளையாட்டரங்கில்

newyearsportsதமிழ், சிங்கள புது வருடத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகம் .யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தலமையகம் மற்றும் யாழ் பொலிஸ் நிலையம் என்பன இணைந்து நடாத்தும் விளையாட்டு போட்டிகள் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று காலை 7. 00 மணிமுதல் இடம்பெற்று வருகின்றது.

இன்று காலை ஆரம்பமான மரதனோட்டம் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் மற்றும் தமிழர்களின் பாரம் பரியம் மிக்க பல விளையாட்டு போட்டிகளில் தமிழ், சிங்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை இந்த விளையாட்டு போட்டிகள் மற்றும் இசைநிகழ்ச்சிகள் இன்று இரவு 11.00 மணிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts