புதுவருட வாழ்த்து கூறி கைகுலுக்கியவர் மோதிரத்தை அபகரித்துகொண்டு ஓட்டம்!!

புது வருடத்துக்கு வாழ்த்து தெரிவித்து கைகுலுக்கிய நபர் கையில் இருந்த மோதிரத்தை அபகரித்துச் சென்ற சம்பவம் நேற்று காலை சுண்டுக்குளி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

2020 ஆம் ஆண்டு புதுவருட தினமான நேற்று ஒருவருக்கு ஒருவர் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியில் கொண்டாடினர்.

வழமைபோல குறித்த நபர் சுண்டுக்குளி பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். இவர் அருகில் சென்றவர் சகஜமாக பழகி அவருக்கு புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து கைகுலுக்கி உள்ளார் .கைகுலுக்கி அவர் கையில் இருந்த மோதிரத்தை அபகரித்து விட்டு அப்படியே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related Posts