புதுப்பொலிவு பெற்றுள்ள யாழ். பல்கலை வளாக மாவீரர் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி!

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ள மாவீரர் நினைவிடத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த போராளிகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர், யுத்த மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமாகியது.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது இன்னுயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்த முதலாவது மாவீரர் சங்கரின் நினைவாக, அவர் உயிரிழந்த கார்த்திகை 27ஆம் திகதி, விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனினால் மாவீரர் தினமாக 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்றிலிருந்து தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த விடுதலைப்புலிகளை நினைவுகூரும் அஞ்சலிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts