முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சந்தைக்கு மரக்கறி விநியோகிக்கும் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவரது மனைவிக்கும் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொதுச் சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் கடந்த வாரம் 12 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட எழுமாறான பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
தம்புள்ளை மொத்த விற்பனை சந்தைக்குச் சென்று மரக்கறிகளை எடுத்துவந்து புதுக்குடியிருப்பு சந்தை வியாபாரிகளுக்கு விநியோகிப்பவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் அவருடன் தொடர்புடைய அனைவரையும் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினால் நேற்றையதினம் வெளியிடப்பட்டது.
அவர்களில் கடந்த சனிக்கிழமை அடையாளம் வியாபாரியின் மனைவிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.