புதுக்குடியிருப்பு மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில்!

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளருடன் நடைபெற்ற சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மக்கள் இன்று முதல் 48 மணித்தியால சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பிரதேச செயலாளருடனான கலந்துரையாடலின்போது, தாம் இவ்விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளதாகவும் மாவட்ட செயலாளரிடமிருந்து பதில் கிடைக்கவில்லையென்றும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 11 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த புதுக்குடியிருப்பு மக்கள் தமது போராட்ட வடிவத்தை மாற்றி சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts