அரச காணிகளை இராணுவத்தினரின் தேவைக்குப் பெற்றுக்கொண்டு மக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் உறுதியளித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் பிரதிநிதிகள் சிலர் நேற்றையதினம் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்திருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது விரைவில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சிறீலங்காப் பிரதமர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக அம்மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், காணிகள் தமது கையில் ஒப்படைக்கப்படும் வரை போராட்டம் தொடருமென மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ந்து இன்றுடன் எட்டாவது நாளாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், எம்.ஏசுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.