புதிய வாக்காளர் இடாப்பு பொது மக்கள் பார்வைக்கு, திருத்தம் இருப்பின் அறிவிக்கவும்

புதிய வாக்காளர் இடாப்பு பிரதேச செயலகங்களிலும், கிராம உத்தியோகத்தர் அலுவலங்களிலும், மாகாண சபை அலுவலகங்களிலும் நாளை (10) முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வாக்காளர் இடாப்புக்களில் பொருத்தமற்றவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலோ அல்லது பெயர்ப் பட்டியலில் தமது பெயர் இடம்பெறாதிருந்தாலோ அது தொடர்பான எதிர்ப்புக்களை தெரிவிக்க அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை காலாவகாசம் வழங்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். எம். முஹம்மட் தெரிவித்துள்ளார்.

Related Posts