அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ள 15 சதவீத வற் (பெறுமதி சேர் வரி)யில் உள்ளடங்கும் மற்றும் உள்ளடங்காத பொருட்கள் மற்றும் சேவைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.
வற் விலக்களிப்பு
தனியார் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் நோய் கண்டறியும் சோதனை, வைத்திய ஆலோசனை சேவைகள், வெளிநோயாளர் சேவை, ஆகியவற்றுக்கே புதிய வற் அதிகரிப்பு விலக்களிக்கப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்டவை
ஆண்டின் மொத்த வருமானம் 50 மில்லியன் அல்லது அதற்கு மேலாக வருமானம் ஈட்டுகின்ற மொத்தம் மற்றும் சில்லறை வர்த்தகம் புதிய திருத்தங்களின் கீழ் உள்வாங்கப்படும்.
தொலைத்தொடர்பு சேவைகள், புகைப்பொருட்கள் உற்பத்தி, சீனி அல்லது பாணி சுவையூட்டப்படும் மா, ஆகியனவும் புதிய வற் திருத்தத்துக்குள் உள்ளக்கப்பட்டுள்ளன.
இலங்கை விமான நிலையங்களிலிருந்து நாட்டுக்கு வெளியே உள்ள விமான நிலையங்களுக்கு வெளியேறுகின்ற பயணிகளின் அனுமதிச்சீட்டு கட்டணமும் புதிய வற் வரி திருத்தத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரியை (வற்) 15 சதவீதமான தொடர்ந்து அமுலில் வைத்திருப்பதற்கு சமர்ப்பிக்கப்பட்ட புதிய திருத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.