புதிய வடக்கு மாகாண ஆளுநராக பள்ளிகக்கார நியமிக்கப்படலாம்!

Palihakkara

புதிய  வடக்கு மாகாகண ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ் பள்ளிகக்கார நியமிக்கப்படவுள்ளார் எனக் கூறப்படுகிறது. எனினும் இந்தத் தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

இவர்  மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியின் கீழ்  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியாகக் கடமையாற்றியதுடன் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் வதிவிடப்பிரதியாகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இதுவரைகாலமும் கடமையிலிருந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி விரைவில் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts