புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணம் இந்த ஆண்டில் இருந்து ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் மின் பொறி யியலாளர் எஸ்.ஞானகணேசன் இத்தகவலைத் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர் பாக அவர் மேலும் கூறியதாவது:
புதிய மின் இணைப்பு களுக்கு முன்னர் 15 ஆயி ரத்து 900 ரூபா அறவிடப் பட்டது. இந்த வருடத்தில் இருந்து ஆயிரம் ரூபாவால் இது அதிகரிக்கப்பட்டு 16ஆயிரத்து 900 ரூபா அறவிடப்படுகிறது.
இந்த தொகை முதல் 50 மீற்றர் தூரத்துக்கு உட்பட்ட வர்களுக்கே. மேலதிக தூரத் தைப் பொறுத்து மின் இணைப்புக் கட்டணம் அறவிடப்படும். அதேபோன்று வடக்கின் வசந்தம் மின்சாரத்துக்கு மின் இணைப்பு கட்டணம் அறவிடப்படமாட்டாது.
மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படும் மாதாந்தக் கட்டணம் வழமை போன்று செலுத்த வேண்டும். வடக்கின் வசத்தம் திட்டத்தில் மீள் குடியமர்த்தப் பட்ட பகுதி மக்களுக்கு இதுவரையில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு மின்சாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் 70 ஆயிரம் பேருக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்த இணைப்புகளை இந்த வருடத்துக்குள் வழங்கத் தீர்மானித்துள்ளோம். மீள் குடியமர்ந்துள்ளவர்களில் மின்சாரம் வழங்கக் கோரி விண்ணப்பம் அனுப்பு வோருக்கும் மின் இணைப்பு வழங்கத் தயாராக உள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.