வடமாகாண சபையின் எதிர்கட்சி வரிசை வெற்றிடத்திற்கு அகிலதாஸ் சிவக்கொழுந்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் வடமாகாணசபை வெற்றி பெற்ற அங்கஜன் இராமநாதன் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அகிலதாஸ் சிவக்கொழுந்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு சுமார் 2400 விருப்பு வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரது நியமனத்தை தேர்தல் ஆணையாளர் விசேட வர்த்தகமானி மூலம் அறிவித்துள்ளார்.